கோவையில் தீபாவளியன்று ஒலி மாசுவைவிட காற்றுமாசு அதிகரிப்பு- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஒவ்வொரு தீபாவளி திருநாளும் காற்று மாசு அடைவது கசப்பான நிகழ்வாகவே கருதப்படுகிறது. கட்டுப்பாடுகள் பல விதித்திருந்தாலும் ஒலி மாசுவை விட இந்த ஆண்டு காற்றுமாசு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கோவை மண்டலம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் காற்றின் தரம், ஒலி மாசு, காற்றின் நச்சுத் தன்மை என மூன்றுவிதமான ஆய்வுகளை மேற்கொண்டது. 

இதில், சுற்றுச்சூழல் காற்றின் தரம் குறித்து தீபாவளிக்கு முந்தைய நாட்கள் மற்றும் தீபாவளி அன்று என இரு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மையங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில் வழக்கமான 100 mg/m3 விட, தீபாவளிக்கு முன்பு அக்டோபர் 12ம் தேதியன்று நடத்தப்பட்ட ஆய்வில் காற்றின் தரம் 34 முதல் 57 mg/m3 (ஆர்எஸ்பிஎம்) ஆக உள்ளது. அக்டோபர் 18 தீபாவளி அன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 68 முதல் 172 mg/m3 என அதிகரித்துள்ளது.

இந்த காற்று மாசானது எளிதில் கரையும் தன்மை அற்றது. போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இதுபோன்ற மாசுக்களை கட்டுப்படுத்த முடியும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஒலி மாசு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டெசிபல் (Decibel) அளவில் வழக்கமாக 125 அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கடவுண்டம்பாளையத்தில் அக்டோபர் 12ம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 61.7 டெசிபல்லாகவும், அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று 71.9 டெசிபல்லாகவும் பதிவாகியுள்ளது. இதேப்போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அக்டோபர் 12ம் தேதியன்று 59.2 டெசிபல்லாகவும், தீபாவளியன்று 65.9 டெசிபல்லாகவும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக, தீபாவளியன்று இரவு 10 மணிக்கு மேல் மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒலி மாசுவின் அளவு குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

நச்சுப்புகை வாயு குறித்தான ஆய்வுகளின் அடிப்படையில் காற்றில் சல்ஃபர் ஆக்சைடு (SO2) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு (NOx) ஆகிய நச்சு வாயுக்கள் அதிகரித்துள்ளன.

தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 12ம் தேதியன்று ஆய்வின்படி சல்ஃபர் ஆக்சைடு 5 முதல் 5.8 mg/m3 ஆகவும், தீபாவளியன்று 9 முதல் 11.5 mg/m3 ஆகவும் பதிவாகியுள்ளது. 

நைட்ரஜன் ஆக்சைடு ஆய்வின்படி அக்டோபர் 12ம் தேதியன்று 23.2 முதல் 25.3 mg/m3 ஆகவும், அக்டோபர் 18 தீபாவளியன்று 25.4 முதல் 36.1 ஆக பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...