டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வால்பாறையைச் சேர்ந்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையை அடுத்துள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் நர்மதா ஆனைமுடி எஸ்டேட்டிற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நர்மதாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நர்மதா பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.