அதிகாரிகள் முறைகேட்டை தட்டிக்கேட்டதால் இடமாற்றம்: தற்கொலைக்கு முயன்ற உதவி ஆய்வாளர் வெளிட்ட வீடியோவால் பரபரப்பு

கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் செயல்பட்டு வருகிறது. இதில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் (47). இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீகாந்த், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணி நிமித்தம் காரணமாக வேலூர் சிறப்பு காவல்படைக்கு பணிக்கு சென்றார். ஸ்ரீகாந்த் பணியில் நேர்மையாக இருந்ததாகவும், அதிகாரிகளுக்கு வளைந்து கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை கோவையில் இருந்து வேலூருக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக ஸ்ரீகாந்த்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து, தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த அவர் இது குறித்து மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனால், தம்பதியினருக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று (வியாழனன்று) காலை வீட்டில் இருந்த சாணிப்பவுடரை குடித்து ஸ்ரீகாந்த் தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்கொலை முயற்சி செய்வதற்கு முன் ஸ்ரீகாந்த் தனது குமுறல்களை கொட்டி  ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார்என்று கூறப்படுகிறது.

அதில், தான் நேர்மையாக இருப்பதால் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் சிலர் போலீயான ரசீதுகள் மூலம் 10 முதல் 20 ஆயிரம் கொள்ளையடிப்பதாகவும் மேலும், சிறப்பு காவல் படையினரின் பயிற்சி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டி  விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நேர்மையாக இருந்த போலீஸ்காரர் ஒருவரை சக அதிகாரிகள் தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் காவல்துறை மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவெடுத்திருப்பதும்,ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்த விசாரணை நடைபெற்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...