பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நாளை (அக்டோபர் 21) நடைபெறவுள்ளது.
திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சு, மற்றும் கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் வரும் அக்டோபர் 21ம் தேதியன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மு.முத்துசாமி, சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் தலைமைவகிக்க உள்ளனர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். தலைமைக் கழக நடுவராக வழக்கறிஞர் நன்மாறன் செயல்படவுள்ளார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக பங்கேற்று வெற்றியடையுமாறு கோவை மாநகர வடக்கு திமுக இளைஞர் அணி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.