சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் சத்யமூர்த்தி கோவிந்தராஜன்

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனம், கோவை மாவட்டத்தில் நிகழும் அனைத்து செய்திகளையும், உண்மையாகவும், உடனுக்குடனும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆண்டு சிறிய குழுவின் மூலமாகத் தொடங்கப்பட்ட தங்களது செய்தி நிறுவனத்தில், கோவையில் உள்ள நிகழ்ச்சிகள் சாதனை நபர்கள் மற்றும் திறமையானவர்கள் குறித்த செய்திகளை வழங்கி வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டிக்கு, இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.  வாரத்திற்கு எங்களுடைய  வெப் சைட்  ஆறு  லட்சம்  பேரால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசியராக சத்யமூர்த்தி கோவிந்தராஜன் பொறுப்பேற்றுள்ளார். செய்தித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், பிரபல இந்து நாளிதழின் மேற்கு   மண்டலமுன்னாள் தலைமை  ஆசிரியராக, பத்திரிக்கைத்துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 

இனி வரும் நாட்களில் ஆசிரியர் சத்யமூர்த்தி தலைமையில், பல்வேறு மாற்றங்களுடன், முக்கிய செய்திகளை தொகுத்து வழங்க காத்திருக்கிறோம். தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பயனீட்டாளர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், தங்களது கருத்துக்களை நேரிடையாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...