கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை அன்னூர் அடுத்த செல்லனூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது 6 வயது மகள் விஸ்மிதா கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி விஸ்மிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.