தீவிர களப்பணிகளால் கோவை மாவட்டத்தின் சுகாதாரம் பேணிகாக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல்

உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறையினரின் தீவிர களப்பணிகளால் கோவை மாவட்டத்தின் சுகாதாரம் பேணிகாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அசோகபுரம் கிராமத்தில் இன்று (அக்.,19)  வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்  மேற்கொண்டார். 



அப்போது, அவர் பேசுகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு வியாழக்கிழமையும், டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டதனடிப்படையில், வியாழக்கிழமைதோறும் துப்புறவு மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் காப்பது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றுது. அதுமட்டுமல்லாமல் தினமும் அதிகாலை முதல் ஒவ்வொரு ஊராட்சியிலும்  டெங்கு காரணிகள் கண்டறிந்து அழிக்கும் பணிகளும் உயர் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

மேலும், கோவை மாவட்ட நிர்வாகம் மழைகாலங்களில் உண்டாகக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் காய்ச்சல்களை கவனமுடன் கையாண்டு நிவர்த்தி செய்து வருவதுடன், அதற்கான காரணிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன .

இயற்கைமுறையில் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்,  நகர்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் நடமாடும் மருத்துவமுகாம்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், சுகாதார பணியாளர்கள் மூலம் வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . 

மேலும், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு அவர்கள் சார்ந்த பகுதிகளில் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் ஏதேனும் அறியப்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தில் சுகாதாரம் பேணிகாத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 

இவ்வாய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர். 

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...