தீபாவளியன்று வெளியாகுமா "மெர்சல்"...? ரசிகர்கள் எதிர்பார்ப்பு...!!

தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், நாளை தீபாவளி அன்று நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை முதல் நாள் பார்ப்பதற்காக திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் இன்று முதலே குவிந்து வருகிறது.



"அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டவாது படம் இது என்பதாலும், மூன்று கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி பலரின் கைபேசி அழைப்புப் பாட்டாகவும் ஒலித்து வருகிறது. 



மேலும், முழு படம் வெளிவருவதற்கு முன்பே மெர்சல் படத்தின் டீசர் பல கோடி மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதேபோல் படமும் பெரும் சாதனைப் படைக்கும்" என்றார் திரையரங்கு வாசலில் டிக்கெட்டுக்காக அலைமோதிக்கொண்டிருந்த விஷ்ணு.

இதனிடையே, கோவை நகரின் பிரதான திரையரங்குகளில் மட்டுமே வியாழக்கிழமை காட்சிகளுக்கான டிக்கெட் விநியோகிக்கப்படுவதால், நாளை இப்படம் திரைக்கு வருமா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ரசிகர் நவீன் கூறியதாவது:-



"சமீபகாலமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் திரையிடுவதற்கு ஒருசில நேரத்திற்கு முன்பு தற்காலிக தடை பெற்று பின் திரைக்கு வருவது வழக்கமாகியுள்ளது. மெர்சல் திரைப்படமும் தற்போது பல சிக்கலை சந்தித்த நிலையில், நாளை வெளிவரும் என்று எதிர்பாக்கிறோம். ஆனால் நாளை மறுநாளுக்கான டிக்கெட் மட்டுமே திரையரங்குகளில் விநியோகிக்கப்படுகிறது. இது குறித்து திரையரங்க உரிமையாளர்களும் முறையாக பதிலளிக்க மறுக்கின்றனர்" என்று புகாரளித்தார்.

இதைப்பற்றி திரையரங்க உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, "நாளை மறுநாளுக்கான டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டதால் தான் தற்பொழுது டிக்கெட் கொடுத்து வருகிறோம். விரைவில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட் கொடுக்கப்படும். ரசிகர்கள் சந்தோஷமாக படத்தைப் பார்ப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திரையரங்க உரிமையாளர்களிடம் நிலவும் இந்த குழப்பத்தால், மெர்சல் மட்டுமின்றி நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சென்னையில் ஒரு நாள் 2, அறம், பொட்டு, மேயாத மான் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களின் வெளியீடும் பெரும் குழப்பத்தில் உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...