டிச.,15-ம் தேதி ரயில்வே பணி ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

ரயில்வேத்துறையில் இருந்து பணி ஓய்வுபெற்றவர்களின் குறை தீர்ப்புக் கூட்டம் வரும் டிசம்பர் 15-ம் நடக்கிறது.

சேலம் கோட்ட  பழைய கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்க வளாகத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள் நடத்த உள்ளது.  எனவே, ரயில்வே பணியில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதிக்கு முன்னதாகவே கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம்.

இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான குறைகள். கருணை அடிப்படையிலான பணி வழங்குதல் சம்பந்தமான குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் காப்பாளர் தொடர்பான குறைகள், மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.  மேலும், ஏற்கனவே நடைபெற்ற ஓய்வூதியர் குறைதீர்ப்பு மன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்டு திருப்திகரமாக பதிலளிக்கப்பட்ட குறைகளும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...