கோவையில் நடக்கவிருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.,16) எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் 3-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுப்பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்து நூற்றாண்டு நிறைவடைந்ததையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓர் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருந்தார். அதன்படியே, அன்னாரது நினைவை போற்றும் வகையில் கோவை மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 3ம் நாள் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.



மேலும், இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். மேலும், விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளனர். 

ஏற்கனவே, கடந்த மாதம் 22-ம் தேதியன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் தொடர் ஆய்வுகளில் நூற்றாண்டு விழா தொடர்பாக தங்கள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக்கல்வி துறையில் சார்பில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளை மாவட்ட அளவில் நடத்திட அறிவுறுத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவர பட்டியல்களை முன்கூட்டியே வைத்துக்கொள்ள வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதுபோலவே, அனைத்து துறைகளின் சார்பில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட அளவிலான துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகின்றது. 

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சியை விழா நடைபெறும் நாளில் நடத்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவுறுத்தப்பட்டு அதற்கான புகைப்பட தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “தனி முத்திரை” விழா நடைபெறுவதை விளம்பரப்படுத்தும் வகையில், அனைத்து விழாக்கள் மற்றும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி பொதுமக்களுக்கு விளம்பரபடுத்திட வேண்டும். மேலும், சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப், டெலி கிராம் மற்றும் இதர வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்த தேசிய தகவல் மையம் மூலம் பணிமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்கும் 15 நாட்கள் முன்னரே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய அளவில் பள்ளி/ கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான விளையாட்டு, இலக்கியம், பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகள், ஓட்டப்பந்தயம், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மிதிவண்டி பேரணி, விளையாட்டு வீரர்கள் பேரணி, சிறப்பு மருத்துவ முகாம்கள், இரத்த தானம் மற்றும் கண்பரிசோதனை முகாம்கள் மற்றும் திரைப்படவிழா, பட்டிமன்றம், என பல்வேறு நிகழ்ச்சிகளில் நடத்தி எம்.ஜி.ஆரின் செயல்களை நினைவு கூறும் வகையிலும், அன்னாரை போற்றும் வகையிலும் சிறப்பாக நூற்றாண்டு விழாவினை நடத்திட அனைத்து துறையினரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...