வருமான வரித்துறை அதிகாரி மாயம் - 5 தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரம்


கோவை வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார் மாயமானதாக குடும்பத்தினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கோவை வருமான வரித்துரை துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவரது தந்தை செண்பக ராமன் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். 38 வயதான சிவக்குமாருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சிவக்குமார் கோவை பீளமேடு அருகேயுள்ள கவுதமபுரி நகர் பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் இருந்து சிறு சூட்கேசுடன் வெளியேறியுள்ளார். அதன்பின்னர் சிவக்குமார் வீடு திரும்பாத நிலையில், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என பீளமேடு காவல்நிலையத்தில் அவரது சகோதரர் ராம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை தேடும் பணியில் 5 தனிப்படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

காவல்துறையினர் நடத்தி விசாரணையில் சிவக்குமார் தனது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வீட்டிலேயே வைத்து சென்றிருப்பதும், இரவு நேரத்தில் நேர்த்தியாக உடையணிந்து அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றது, அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக வெளியேறினாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை துணை ஆணையர் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...