சிறுபான்மையினர் வழிபாட்டுத் தளம் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

நீலம்பூர் பகுதியில் சிறுபான்மையினருக்கான வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

சூலூர் வட்டம், நீலம்பூர் பகுதியில் கிருத்துவ மதத்தினருக்கான ஜெப ஆலயங்கள் செயல்பட்டு வருகின்றன . இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைகளில் நாங்கள் மிரட்டி தொகை வசூலிப்பதாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையான நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நீலம்பூர் பகுதியில் உள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...