கான்ஃபடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சிஐஐ), தமிழ்நாடு டிரேவல் மார்ட் சொசைட்டியுடன் இணைந்து இந்திய சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஆதரவோடு சிஐஐ தமிழ்நாடு டிரேவல் மார்ட் என்னும் பொருட்காட்சி நடைபெற்றது.

அக்டோபர் 12 முதல் 15 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியில் ஆஸ்திரேலியா, கன்னடா, ஜெர்மனி, இந்தோனேசியா, மலேசியா, நார்வே, ரஷ்யா, அமெரிக்கா, லண்டன், இலங்கை உள்ளிட்டு 34 நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட சர்வதேச வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வியாபாரிகளும் பங்கேற்றனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். தமிழக சுற்றுலா, பண்பாடு தலைமைச் செயலாளர் அப்பூர்வ வர்மா மற்றும் தமிழக சுற்றுலா மேம்பாட்டுத் துறை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியானது தேச அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழக சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும் வகையில் அமைந்திருந்தது.