வெடிபொருட்களால் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்!: கோவை அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சிறப்புப் பேட்டி

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். குழந்தைகளுக்கென சின்ன சின்ன பட்டாசுகள், பெரியவர்களுக்கென 'டமால்-டுமீல்' பட்டாசுகள் என ரக ரகமாக பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை நெருங்கிவிட்ட இந்த நேரத்தில் இளசுகள் தற்போது முதலே பட்டாசுகளை வெடிக்க துவங்கியுள்ளனர்.

ஆண்டுதோறும், தீபாவளி என்றால் பட்டாசுகள் வெடிப்பது போல, தீவிபத்துகளும் நடப்பது வாடிக்கையாகி விட்டது. லாப நோக்கில் பட்டாசுகளை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் தரமற்ற முறையில் அவற்றை தயாரித்து சந்தைகளில் விற்பனைக்கு விடுகின்றனர். இவ்வாறான பட்டாசுகள், அதன் தன்மையை இழந்து, தாறுமாறாக வெடிப்பதுடன், அருகில் இருப்பவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. 

இந்த நிலையில், பட்டாசுகளின் மூலமாக தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரால் கழுவ வேண்டும் என கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நம் நாட்டின் மிக முக்கிய பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பாதுகாப்பாக கொண்டாடப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பட்டாசுகளை வெடிப்பதற்கு முன் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். காலணி அணியாமல் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களின் மேற்பார்வையிலேயே குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். 

எதிர்பாராதவிதமாக உடலில் தீ பிடித்துவிட்டால் சமதளத்தில் படுத்து உருள வேண்டும். தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக சுத்தமான தண்ணீரில் தீ காயத்தை கழுவிவிடுங்கள். முடிந்த வரையில் சிறிய முதலுதவியோடு அருகில் உள்ள மருத்துவமனையை அணுகிவிடுங்கள். இல்லையேல், அந்த காயம் சீழ்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. தீக்காயம் ஏற்பட்ட அளவினை பொறுத்து மருத்துவம் செய்யப்படும் முறைகள் மாறுபடுகின்றன. அதேபோல, கியாஸ் சிலிண்டர் மீது தீப்பிடிக்கும் போது தண்ணீர் ஊற்றி அணைக்காமல் மாறுபட்டு செயல்பட வேண்டும். கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவின் மூலம் தீப்பிடித்தால் உடனடியாக சாக்கை தண்ணீரில் நனைத்து கியாஸ் சிலிண்டர் மீது போட வேண்டும். 

மது போதையில் விபத்து!

பண்டிகையின் போது அதிகமாக மதுக்குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு, மதுபோதையில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படக்கூடும். ஏனெனில், அவர் மது போதையில் மயக்கமாக உள்ளார? அல்லது விபத்தினால் மயக்கமடைந்தாரா ? என்பது தெரியாது. இந்த சூழலால் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதில் சிரமங்கள் ஏற்படக்கூடும். எனவே, மதுபோதையில் யாரும் வாகனங்கள் ஓட்ட வேண்டாம்.

பண்டிகை நாளில் தீக்காயம் மற்றும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையை அணுகலாம். இங்கு விபத்து மற்றும் காயம் சிகிச்சை பிரிவு, அவசரசிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு முறிவு போன்ற அனைத்து பிரிவு மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். 

அனைவரும் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையாகவும் தீபாவளியை கொண்டாடினால் தான் அது அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...