தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வரும் டெங்குக் காய்ச்சலை தடுக்க அரசும் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உரியி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, தனி வார்டு உருவாக்கப்பட்டு, கொசுவலைகள் அமைத்து உரிய சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் கூறுகையில், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 31 பேர் மருத்துவமனையில் தனிவார்டிலும், 215 பேர் சாதாரணக் காய்ச்சலுக்கு பொதுவார்டிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 31 டெங்கு நோயாளிகளில் 15 ஆண்களும், 11 பெண்களும், 3 ஆண்குழந்தைகளும், 2 பெண்குழந்தைகளும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில், 16 பேர் கோவையையும், 12 பேர் திருப்பூரையும், ஒருவர் தஞ்சையும், எஞ்சியவர்கள் ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
சாதாரண வார்டில் பாதிக்கப்பட்ட 215 பேருக்கும் பல்வேறு ரத்தமாதிரி மேற்கொள்ளப்பட்டு, எந்த வகையான காய்ச்சல் என ஆராயப்பட்டு வருகிறது. அதில், எவரேனும் டெங்கு அல்லது பிற காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனே தனிவார்டுக்கு மாற்றப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். டெங்குவால் பாதிக்கப்பட்ட வார்டுகள் 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு . வருகின்றன
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிறந்த சிகிச்சையை அளிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து, அதிகரித்து வருவதால், மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை நாள்மோறும் மேற்கொள்ள வேண்டும்.
நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்தாகும். ஆனால், அது முழுவதும் குணமடையச் செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்.