கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் மிதமான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மத்திய வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. வால்பாறையில் அதிகாலை முதல் மழை பெய்தது. தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை போட்டப்படி சென்றன. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.