உடுமலையில் அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசுப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 பேரை பலி கொண்ட கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ள அரசுக்கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாழடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தால், மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், பள்ளி மாணவர்கள் வகுப்பில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தப் பள்ளிக் கூடம் திறக்கப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில், இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், எனவே, தரமற்ற இந்தக் கட்டிடத்தை கட்டிய கட்டிட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கையை, அரசு எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 



இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் கூறுகையில், பள்ளிக் கட்டிடத்தை ஒப்பந்தக்காரர் அவசர அவசரமாக கட்டியதால், மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு பெய்த கனமழையால், வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இதனால், சில மாணவர்கள் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசுப்பள்ளி மேற்கூரையின் சிமெண்ட் துகள்கள் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பள்ளிக்கு இன்று (அக்.,13) விடுமுறைப்பட்டதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் விசாரணை நடக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...