கோவை குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் குறும்பபாளையத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரவும், மணல் கொள்ளையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறும்பபாளையம் அருகே உள்ள மதுக்கரை பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் இரண்டு ஏரிகள் உள்ளன. அறிவொளிநகர், பி.கே.புதூர், இடையர்பாளையம் மச்சம்பாளையம், சுந்தராபுரம், மைல்கல் மற்றும் குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீர், சிறு நீர்தேக்கங்கள் வழியாக ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஏரிகள், பொதுப்பணித்துறையினரால் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த ஏரியை மேம்படுத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, ஏரிகளை 6 அடி வரை தூர்வாரினால், மேலும் அதிகமான நீரை சேமிக்கலாம் எனவும், விலை மதிப்புடைய மணலை சில அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவகால மழையானது, வெளுத்து வாங்கியதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இருப்பினும், ஒரு சில அணைகளில் ஏற்பட்டுள்ள உடைப்புகளால் நீரை சேகரித்து வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நீர்தேக்கத்தின் கட்டுமானங்களை சீர்செய்யாமல், வெறும் தூர்வாரும் பணியால் நீரை சேர்த்து வைக்க முடியாது என்றும், எனவே, அணையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 



நீர்தேக்கத்தை சீரமைக்க குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் தேவைப்படுவதாகவும், பொதுப்பணித்துறையினரால் இந்தத் தொகையை ஒதுக்க முடியாது. அதேவேளையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்களும் இல்லாததால், இது தொடர்பாக, மூத்த அதிகாரிகள் கவனத்தில் எடுத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...