தமிழகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு செல்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில், மக்கள் நல்வழ்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்விதுறை இணைந்து பள்ளிகளில் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன . எதிர்காலத்தில் கொசு உற்பத்தி மூலம் நோய்கள் பரவாமல் இருக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களில் சிறு சிறு குறைபாடுகள் உள்ளன.