அக்டோபர் 18-ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிட்., சார்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை ஆகிய இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சுமார் 430 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், கோவையில் இருந்து சென்னை செல்லவும், சென்னையில் இருந்து கோவைக்கு திரும்பி வரவும் 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
1. சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள்:-
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணா நகர் (மேற்கு)-யில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துநிலையத்தில் இருந்து புறப்படும்.
2. சென்னையில் இருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள்:-
கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர்) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.
3. சென்னையில் இருந்து விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி வழியாக செல்லும் பேருந்துகள்:-
திண்டிவனம், விக்ரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்துகளும் (எஸ்இடிசி உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
4. சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்:-
பூவிருந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஒசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவில்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
மேற்கண்ட தடப்பகுதிகளில் செல்லும் முன்பதிவு செய்துள்ள மற்றும் முன்பதிவு செய்தாத பயணிகள் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் மட்டும் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் சென்று பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
5. சென்னையில் இருந்து இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்:-
மயிலாடுதுறை, கும்பகோணம் (இசிஆர்) காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கபடும்.
மேலும் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்புப் பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும்.