கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயம்- வேளாண்மைத்துறை இயக்குநர் தகவல்

கோவை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டிற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தமிழக வேளாண்மைத் துறை இயக்குநர் தட்சினாமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை உணவு உற்பத்திக்கு போதுமான அளவு பெய்யும் என உத்தேசிக்கப்பட்டுள்ளதால் எவ்வித குறைபாடுமின்றி இவ்வாண்டிற்கான இலக்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோவை வேளாண்மை பல்கலை கழக கூட்டரங்கில் இன்று (அக்டோபர் 12) மண்டல அளவில் வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இவ்வாய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசு விவசாயம் செழிக்கவும், மற்றும் விவசாயிகளை காக்கின்ற வகையிலும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உறுதுணையாக இருந்து வருகின்றது. அவ்வாறு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து உரிய பயனாளிகளை கண்டறிந்து அவர்கள் எளிமையாக பெறும் வகையில் அலுவலர்கள் பணிற்றிட வேண்டும்.

தமிழ்நாட்டின் 2017-18 ம் ஆண்டிற்கான உணவு உற்பத்தி இலக்கு 125 லட்சம் மெட்ரிக் டன்னாகும். இதில் கோவை மாவட்டத்திற்கு உணவு உற்பத்தி இலக்கு 91200 மெட்ரிக் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் நெற்பயிர் 2400 ஹெக்டரிலும், சோளம் 27500 ஹெக்டரிலும், மக்காச்சோளம் 4600 ஹெக்டரிலும், கம்பு 100 ஹெக்டரிலும், பயறு வகைகள் 11050 ஹெக்டரிலும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...