கோவை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் கட்டணம் வசூல் குறித்து ஆய்வு

மூன்று வாகனங்கள் நிறுத்தும் இடங்களின் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராத தொகை தலா ரூ.20,000 விதிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி உத்தரவின்படி மாநகராட்சி, மத்திய மண்டலத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றதா என்பதை மாநகராட்சி வருவாய் பிரிவினர் ஆய்வு செய்தனர். 

அந்த ஆய்வின் போது மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.81-ல் குரு ஹோட்டல், வார்டு எண்.83-ல் தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் இராஜவீதி ஆகிய வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரம் நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.10-க்கு பதிலாக கூடுதலாக ரூ.20 பொதுமக்களிடமிருந்து வசூல் செய்வது கண்டறியப்பட்டது.

மேலும், மேற்கண்ட இடங்களில் மாநகராட்சியின் கட்டண அறிவிப்பு பலகையை பொதுமக்கள் பார்வையில் தெரியாதபடி மூடி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. 

மாநகராட்சி பொது ஏல விதிமுறைகளை மீறி செயல்பட்டமைக்கும், மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியமைக்கும், மேற்கண்ட சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அபராத தொகை தலா ரூ.20,000 விதிக்கப்பட்டு, கோவை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதுமேலும், இக்கடிதம் பெற்ற 3 தினங்களுக்குள் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக கருவூலத்தில் அபராத தொகையினை செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த ஆணை ரத்து செய்யப்பட்டு தங்களது பெயரினை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இவ்வினத்தினை பொது ஏலத்தில் சேர்க்கப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மாநகராட்சி மத்திய மண்டலம் (பொ) உதவி ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...