கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான உன்னி என்கிற ரமேஷ் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவரது சகோதரர் மனோஜ்குமார் தனது நண்பர்களான வெள்ளியங்கிரி, விஜய் ஆனந்த்துடன் சேர்ந்து கொலை செய்ததாக கடந்த 2009-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிருஷ்டோபர் இன்று உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட மேலும் இருவரான ஷங்கர், பாலு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.