பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மகன் அதிக அளவு வருமானம் ஈட்டியது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜேஷா நடத்தி வரும் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு வருமானம் ஈட்டியது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத் துறை சோதனைகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விரைவில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.