ஆனைகட்டி அருகே யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்கள் வேலியிட்டு அடைப்பு

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி வழியே உள்ள ஆலமரமேடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சலிம் அலி பறவையியல் துறை மற்றும் இயற்கை வரலாறு மையப்பகுதி வழியாக வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் சாலைகளுக்கு வருகின்றன. இந்த நடைபாதையை பயன்படுத்தி ஆனைக்கட்டி, போளுவாம்பட்டியை இணைக்கும் சாலையை கடந்து சென்று அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நீர்தொட்டிகளில் நீர் குடிக்கச் செல்கின்றன. 

வறட்சி காலங்களில் எஸ்.ஏ.சி.ஓ.என். வளாகத்தை கடந்து அங்கு செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் அருகே அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்கங்களில் யானைகள் நீர் குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.  மேலும், அந்த வழியாக யானைகள் நடமாட்டம் இருப்பதை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். 

அண்மையில் நீர் குடிப்பதற்காக சாலைக்கு வந்த யானைகள், அந்த வழியாக சென்ற வாகனங்களை துரத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால், யானைகள் சாலைகளுக்கு வராதவாறு வேலிகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து சாலைகளுக்கு வர யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை தனியார் நிறுவனம் சார்பில் இரும்பு வேலியிட்டு அடைக்கப்பட்டுள்ளது. 



ஆனால், இந்தவேலியை யானைகள் எளிதில் உடைத்துவிடும் என்றும், இதுமாதிரியான தடுப்புகளை அமைப்பதினால், மற்ற பகுதிகளில் யானைகள் மோதல் போக்கில் ஈடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், வேலி அமைக்கப்பட்டுள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனவும், யானைகள் செல்வதற்கான சரியான பாதையை அமைத்து வேலியை கட்டுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...