நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டமானது மலைப்பிரதேச மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தின் பூகோள ரீதியான அமைப்பின்படியும் புவியியல் தொழில்நுட்ப துறையின் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளின் ஆய்வறிக்கையின்படியும் நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளின் பல்வேறு இடங்களில் கட்டிடம் கட்டும் பணிகளை முறைப்படுத்த வேண்டியும், அனுமதியற்ற கட்டிடங்களை தடுக்கும் வகையிலும் மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி பெற வேண்டி பெறப்படும் விண்ணப்பங்களின் காலத்தாமதத்தை தவிர்க்கவும், நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற மாவட்ட நிர்வாகம் சார்பாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் அனைவரும் இந்த இணைய தளத்தில் புதிதாக கட்டிடம் கட்ட அனுமதி பெற விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். அவ்விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதிவேற்றம் செய்து பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இணை தள முகவரி: www.nilgirisbuildingpermissions.org