கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர் (காட்மா) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள துணை அஞ்சலகத்தில் இருந்து பிரதமர், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.

அப்போது, ஜாப் ஆர்டர்களில் ஈடுபடும் குறுந்தொழில் கூடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக குறைக்க கோரியும், ஆண்டுக்கு இருபது இலட்ச ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டும் குறுந்தொழில் கூடங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு அளிக்க கோரியும் 20 ஆயிரம் மின்னஞ்சல் மற்றும் தபால் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பின்னர் குறுந்தொழில் கூடங்களில் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி சலுகைகளில் குறுந்தொழிலுக்கு எந்த சலுகையும் இல்லை என குறுந்தொழில் முனைவோர்கள் குற்றம்சாட்டினர்.