நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் விமானம் மூலம் கோவை விந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
அரசியலில் வன்முறைகள் செல்லாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக-வால் தற்போது கேரளாவில் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்களை எதிர்த்த சுமார் 250 பேர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
டோக்லாம் பிரச்சனையை பிரதமர் இந்திய, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பில்லாமல் தீர்த்து வைத்துள்ளார். அனைத்து எல்லைகளிலும் நமது இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் தான் உள்ளது.
இவ்வாறு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.