இருகூர் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

இருகூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத சுரங்கப் பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சமூக விரோதிகளால் சேதமடைந்து வரும் நூலகத்தினை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இருகூர் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இருகூர் நகரில் பொதுமக்கள் பயன்பெற சுரக்கப்பாலம் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் 4 மாதங்களைக் கடந்தும் தார்சாலை செப்பனிடப்படாததால் சுரங்கப்பாலம் சிதலமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணமே விரயமாகிறது. 

இருகூரில் செயல்பட்டு வரும் நூலகத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது நூலகம் அரசு ஆரம்பப் பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் நூலகம் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இருகூர் பேரூராட்சியில் 2வது அத்திக்கடவு குடிநீர் திட்டம் நிறைவடைந்து தட்டுப்பாடு இல்லை. ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புதிய குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

எனவே கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...