அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை- தமிழிசை சௌந்தராஜன் கேள்வி

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து கடைநிலை ஊழியர் நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கை அல்ல. மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்த வேண்டும். தற்போதைய டெங்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது தான் காரணம். 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பரோல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றதா என்பதை அரசு கவனிக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்கட்சி முறையாக செயல்படவில்லை.

கெயில் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது திமுக. ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக தற்பொது ஒரு நிலைப்பாடும் திமுக எடுக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை திமுக ஆட்சியில் ஏன் அமலாக்கவில்லை ?.

கீழடி அகழ்வாராய்சி அனாவசியமாக அரசியல் ஆக்கப்படுகின்றது. அகழ்வாராச்சிக்கு பின்னர் மண் போட்டு மூடுவது இயல்பான நடைமுறை. 

பாஜக ஆட்சியில் 12.5 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவுமே செய்யவில்லை என தவறான தகவல் பரப்பப்படுகிறது. 

அமித்ஷா மகன் ஜெய் மீதான குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதல்ல. 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு போடப்பட்டு உள்ளது. பாஜக தேசியச் செயலாளர் அமித்ஷாவின் மகன் ஜெய் ப.சிதம்பரம் மகனை போல இல்லை. முறையாக அனைத்து  வரிகளும் கட்டி இருக்கின்றார்.

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...