கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஐந்து மண்டலங்களில் ஒப்பந்த முறையில் 2000 பேரும், மலேரியா பிரிவில் 500 பேரும் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வரை போனஸ் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தொழிலாளர் நல சட்டபடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆண்டு வருவாயை கணக்கிட்டு எட்டு புள்ளி முப்பத்தி மூன்று சதவிகிதம் போனஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.