மேட்டுப்பாளையம் ரங்கராஜன் தெருவை சேர்ந்தவர் அஸ்லாம். இவரது மகன் அமீர் (26). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் தீவிரவாத தொடர்புடைய நபர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு துறை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அமீரின் நண்பரும் , ஆம்புலன்ஸ் ஓட்டுனருமான ரஹமதுல்லா என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இருவரையும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த அதிகாரிகள் வரும் 9ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.