கோவை, திருப்பூர் மாவட்ட பாசனத்துக்காக திருமூர்த்தி அணை 8-ந்தேதி திறப்பு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து 8.10.2017 முதல் உரிய இடைவெளி விட்டு இரண்டு சுற்றுகளாக மொத்தம் 3,800 மி.க. அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களில் உள்ள மொத்தம் 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...