கணபதி அருகே நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி- நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணபதி அருகே லட்சுமி புரம் பகுதியில் சூரிய கணபதி சிட்பன்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நிதிநிறுவன ஊழியர்கள் கூறியதாவது:-

கணபதி அருகே சுரிய கணபதி சிட்பன்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜீத்து ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து ஆறு ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வைப்புத் தொகையாக பெற்றனர்.



ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிதிநிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடித்தனர். வைப்புத் தொகை குறித்து கேள்வியெழுப்பும் மக்களுக்கு மட்டும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகையினை வழங்கினர். மேலும், இதுகுறித்து கேள்வியெழுப்பினாலோ அல்லது வழக்கு பதிந்தாலோ பணம் எதுவும் தராமல் சென்றுவிடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நிதிநிறுவன தலைவர் மற்றும் ஜீத்து திருசூரில் சுப்ரீம் பைனான்ஸ், குரிஸ் என்னும் நிதிநிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான பணம் இருந்தும் பொதுமக்களின் பணத்தினை திருப்பி வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சேரவேண்டிய தொகையினை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கூறினர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...