கோவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்று டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஹரிஹரன் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படிப்படியாக டெங்கு பாதிப்புகள் குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் தேவையற்ற விடுமுறைகள் எடுப்பதை தவிர்க்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வருபவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிகளில் அதிகளவில் சுகாதார பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி ஆட்சியர் சரண்யாஹரி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி, மாநகராட்சி மருத்துவ அலுவலர் சந்தோஷ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி இயக்குநர்கள் பத்மாவதி, கணேஷ்ராம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...