சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிறார்.
அவரது கணவர் நடராஜன் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளது. அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்து விட்டதால், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நடராஜன் காத்திருக்கிறார். உறவினர் ஒருவரின் கல்லீரல் நடராஜனுக்கு பொருத்தப்பட உள்ளது. நடராஜனுக்கு ஆப்ரேஷன் நடக்கும்போது அவரை அருகில் இருந்து சசிகலா கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று உறவினர்கள் வலியுறுத்தினார்கள்.
இதை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார். 15 நாட்கள் பரோலில் செல்ல சசிகலா சார்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்தனர்.
சசிகலா பரோல் மனுவுடன் அவரது கணவர் நடராஜனின் மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக சென்னை குளோபல் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து மருத்துவ அறிக்கையும் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. எப்படியும் அவர் பரோலில் வெளியே வருவார் என தினகரன் ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சசிகலாவின் பரோல் மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருவதாக இன்று பிற்பகல் கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், சசிகலாவின் பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக இன்றிரவு தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, நடராஜனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக புதிய மருத்துவ அறிக்கையுடன் சசிகலா தரப்பில் புதிய பரோல் மனு தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.
சசிகலாவின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக வெளியாகிவரும் தகவல்களை கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் (தினகரன் அணி) புகழேந்தி மறுத்துள்ளார். மனு பரிசீலனையில் உள்ளதாகவும், நிரகரிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.