சீரமைப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் சின்னவேடப்பட்டி ஏரி- விரைந்து நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. குறிப்பாக, நொய்யல் உள்ளிட்ட அழியும் தருவாயில் இருந்த ஆறுகளில் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆனால், கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சரிவர வரவில்லை. கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதார திட்டமாக உருவாக்கப்பட்டது சின்னவேடப்பட்டி ஏரி. கோவை நகரின் வடக்கு பகுதி செழிக்க பல விவசாய மக்கள் தங்களது நிலங்களை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளனர்.

சங்கனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் மிகப்பெரிய பேரிழப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சின்னவேடப்பட்டி ஏரி தற்போது பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், சங்கனூர் ஓடையில் உள்ள கணுவாய் பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் சின்னவேடப்பட்டி ஏரியின் ராஜாவாய்க்கால் பராமரிப்பின்றி உள்ளதே ஆகும்.



கணுவாய் பகுதியில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியின் ராஜ வாய்க்கால் ஷட்டர்கள் சரிவர பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சங்கனூர் ஓடையில் வெள்ளம் வரும்போது மிக குறைந்த அளவே ஷட்டர்கள் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு வருகிறது.



சரவணம்பட்டி பகுதியைப் பொறுத்தவரை ஏராளமான குடியிருப்புகளும், கல்லூரிகளும் அமைந்துள்ளன. கோவை மாநகரின் மிகப்பெரிய தொழிற்சாலை நிறுவனங்களும், தொழில்நுட்ப ஐ.டி கம்பெனிகள் இந்தப்பகுதியில்தான் உள்ளது. இதன்காரணமாக, சரவணம்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் மாநகராட்சி உள்ளது.



தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி புனரமைப்பு செயல்பாட்டில் சின்னவேடப்பட்டி ஏரி பாசன சங்கத் தலைவர் களிசாமி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் செல்வராஜ் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. 



இதன் முதற்கட்டமாக பொதுப்பணித்துறை வசம் கோரிக்கை விடுத்ததன் விளைவாக தற்போது சின்னவேடப்பட்டி ஏரி மற்றும் சங்கனூர் ஓடையில் கணுவாய் தடுப்பணை, ராஜ வாய்க்காலை சீரமைக்க சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு ஏற்படுத்தி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், சின்னவேடப்பட்டி ஏரியை கோவையின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் சேர்க்க சின்னவேடப்பட்டி ஏரி மீட்புக் குழுவின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, ராஜ வாய்க்கால்களில் தண்ணீர் வரும்போது தன்னார்வலர்கள் உதவியுடன் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...