புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளது - புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் கோவையில் பேட்டி



புதுவை அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் மோதல் இல்லை. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை என புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பல்கலைக் கழக அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பல்கலைக் கழகம் துவக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பல்கலைக் கழக வேந்தர் சுப்பிரமணியன் கூறியதாவது:-

உள்ளாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற கல்வியாளர்கள் இணைந்து டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளனர். 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் இந்தப் பல்கலைக் கழகத்தின் முதல் கிளை கோவையில் துவங்கப்படுகிறது என்றார்.



இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.



அப்போது அவர் கூறுகையில், புதுச்சேரி அரசின் மீது துணை நிலை ஆளுநரின் தலையீடு எங்களுக்கு நெருடளாக உள்ளது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் இது போன்று இல்லை. சில கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார். 



ஆளுநர் சொல்வது போல புதுவையில் டெங்கு தீவிரமாக பரவவில்லை. டெங்கு பரவுவது கட்டுக்குள் உள்ளது. டெங்குவைக் கட்டுப்படுத்த புதிய கமிட்டி ஒன்றை முதலமைச்சர் நாராயணசாமி அமைத்துள்ளார்.

இவ்வாறு புதுச்சேரி மாநில நிதி அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...