கோவையில் அழிந்து வரும் காட்டன் ஆலைகளை நினைவுப்படுத்தும் 5 நட்சத்திர ஹோட்டல்!



தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பருத்தியின் அழகை தற்போது காண முடிவதில்லை. பஞ்சாலைகள், நெசவாலைகளை கோவை மக்கள் ஒருபோதும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், கொங்கு நகரமான கோவை மக்களின் இனிமையான பழைய நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் ஐடிசியின் வெல்கம்ஹோட்டல் சார்பில் ஆடைகள் தயாரிக்கப்படும் தரிகள், நூல் கெண்டைகளைப் போன்ற வடிவமைப்புளுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகளுடன் கூடிய பார் வசதி இடம்பெற்றிருக்கும்.



அதுபோல, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலிலும் பார் வசதியுண்டு. ஆனால், இது குடிமகன்கள் எதிர்பார்க்கும் மதுபாட்டில்கள் அடங்கிய பார் அல்ல. இங்கு, கொங்கு மண்ணின் பெருமையை உணர்த்தும் வகையிலான காட்டன் (பஞ்சு) பார் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜையிலும் பருத்தி பந்து மாதிரியான வடிவத்தில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



வெல்கம் கஃபேவின் கோவை 5 நட்சத்திர ஹோட்டலின் உணவு வகைகளும் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இனிப்புடன் தொடங்கும் உணவு முறையில், மாங்காய் மீன் குழம்பு, கீமா உருண்டை குழம்பு, பருப்பு ரசம், சேனை கிழங்கு வறுவல், அரைத்து வைக்கப்பட்ட மட்டன் குழம்பு, சின்னவெங்காய மட்டன் சுக்கா போன்ற உணவுகள் அந்த ஹோட்டலின் அடையாளமாக உள்ளது.



இதைத்தொடர்ந்து, இந்த ஹோட்டலில் மொத்தம் 103 அறைகள் உள்ளன. திருமணம், விருந்து, ஆலோசனைக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக குறைந்தபட்சம் 200 பேர் அமரும் வகையிலான அரங்கு கட்டப்பட்டுள்ளது. மேலும், 5-வது மாடியில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் குளிப்பதற்காக 3,6 அடி ஆழத்தில் நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.



கடந்த 1-ம் தேதி முதல் வெல்கம்ஹோட்டல் கோவை 5 நட்சத்திர ஹோட்டல் வாடிக்கையாளரின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த மாத இறுதி வரையில், பார் வசதியை இணைக்க முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...