காந்தியின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் அங்காடியில் சிறப்பு விற்பனை துவக்கம்

காந்தியின் 148-வது பிறந்தநாளினை முன்னிட்டு கோவையில் கதர் அங்காடியில் சிறப்பு விற்பனையினை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.



மத்திய அரசின் கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் கதர் விற்பனை நிலைய அங்காடியில் விழாக்காலங்களை முன்னிட்டு சிறப்பு விற்பனைகள் துவங்கப்படுவது வழக்கம். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு கோவையில் செயல்பட்டு வரும் கதர் பவனில் மாவட்ட ஆட்சியர் சிறப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், தீபாவளி தினத்தினை முன்னிட்டு கதர் ஆடைகளுக்கு 30 சதவிகிதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவிகிதம், பாலியீஸ்டர் துணிகளுக்கு 30 சதவிகிதம், உள்ளன் ரக ஆடைகளுக்கு 20 சதவிகிதம் என சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



அவிநானி சாலையில் செயல்பட்டு வரும் பிரதான கதர் அங்காடி, ஆர்.எஸ்.புரம், பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி, உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கதர் அங்காடியில் இந்த தள்ளுபடிகள் உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையில் 1.69 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1.52 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. 

பொதுமக்கள் கதர் அங்காடியின் சிறப்பு விற்பனைக்கு தங்களது ஆதரவினைத் தர வேண்டும்.

இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டு 1.69 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது நடப்பு ஆண்டிற்கு 1.52 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது கதர் ஆடைகளின் பயன்பாடு குறைந்து வருவதை உணர்த்துகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நாகரீக உடைகளின் பயன்பாட்டினாலேயே கதர் பயன்பாடு குறைந்துள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...