மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரிப்பதாக பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது கூறியதாவது:-

மத்திய அரசு கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக செயல்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரித்து வருகின்றனர்.
அரசியலைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க கோரி வருகின்ற அக்டொபர் 7 ம் தேதி மதுரையிலும், 8 ம் தேதி சென்னையிலும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு நடைபெறவுள்ளது.
மியான்மர் நாட்டில் ரோஹிங்கா முஸ்லீம் அகதிகளுக்க மத்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.