தமிழக ஆளுநராக இருந்த ரோசையா பதவி ஓய்வு பெற்றதையடுத்து, மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து வந்தார்.
இந்நிலையில், தமிழகம், பீகார், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேகாலயா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோஹித், தற்போது தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பீகார் மாநில ஆளுநராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில ஆளுநராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில ஆளுநராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.