முடிவில், சிவாஜி மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம் கட்டி உள்ளது. இங்கு சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவர் இருப்பது போன்ற படங்கள் உள்பட 188 புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மெரினா கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசன் சிலையும், இந்த மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ளது. சிவாஜி மணிமண்டபத்தை அடுத்த மாதம் 1-ந்தேதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் மகனும் நடிகருமான பிரபு, மணிமண்டபத்தை முதலமைச்சர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்க வேண்டும் என நடிகர் சங்கம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் குரல் எழுப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் பங்கேற்று சிவாஜி மணிமண்டபத்தை ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார்.

சிவாஜி மணிமண்டபத்தை பன்னீர்செல்வம் திறந்து வைப்பார், ஜெயக்குமார் தலைமையில் நடக்கும் விழாவில் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிப்பார் என முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளின்படி வெளியூரில் இருப்பதால் சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்க முடியாத நிலை என முதலமைச்சர் பழனிச்சாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைப்பது வரவேற்கத்தக்கது என நடிகர் பிரபு கூறி உள்ளார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...