நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். அப்போது, அந்த வழியாக குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி.அ.ராமு வந்தார். விபத்தில் பெண் படுகாயமடைந்திருப்பதை கண்டு உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை, எம்.எல்.ஏ. சாந்தி.அ.ராமு, தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர், மருத்துவமனையில் அவரை அனுமதித்த பின்பு மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்து சென்றார்.