தொடர் மழையால் இன்னும் 4 அடி தண்ணீர் வந்தால் சிறுவாணி அணை நிரம்பிவிடுமாம்..!

மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழக - கேரள எல்லையோர வனப்பகுதியில் உள்ள சிறுவாணி அணை, கோவை மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமாக உள்ளது. இந்த அணையில் இருந்து பெறப்படும் நீர், மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை குறைந்ததால், அணையில் நீர் தேக்க முடியாத சூழல் நிலவியது. 

இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும், சிறுவாணி அணைக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. கடந்த சில நாட்களாக கேரள வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான முத்திகுளம், பாம்பாறு, பட்டியாறு ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் கணிசமாக கூடியிருப்பதால், ‘டெத் ஸ்டோரேஜ்’ எனப்படும் இறுதிகட்ட கொள்ளளவை நீர்மட்டம் எட்டியுள்ளது. 

சிறுவாணியின் அடிவாரத்தில் 7 மி.மீ. மழையும், அணைப்பகுயில் 31 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதனால், அணையில் நீர்மட்டம் 51.76 கனஅடியாக உயர்ந்துள்ளது. மொத்த கொள்ளளவு 55.76 கன அடி என்பதால், அணை நிரம்பி வழிய இன்னும் 4 அடிகளே உள்ளன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், மொத்த கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நீர் இருப்பு 877.28 டி.எம்.சி. ஆகும். பாசன வசதிக்காக அணையில் இருந்து நாளொன்றுக்கு வினாடிக்கு 75.50 மில்லியன் லிட்டர் நீர் திறக்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...