வளமான குழந்தைகளை உருவாக்கி நலமான சமுதாயத்தை படைக்கும் முயற்சி

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய அறம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம், சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள்தான் சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள், எனவே, வளமான குழந்தைகளே நலமான சமூகமாகும்.

குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வியே மூலதனமாகும். ஒவ்வொரு குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை, ஏற்ற சுற்றுச்சூழல், சரியாக வழிநடத்துதல், சுதந்திரமாக செயல்பட விடுதல் ஆகியவற்றின் மூலம் வெளிக் கொண்டுவருவதால், அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கிறது. இந்த வெற்றிகளின் காரணமாக இறுதியில் நல்ல குடிமகன் உருவாகின்றான். இதன் மூலம் புதிய சமுதாயம் பிறக்கிறது. 

கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு வலுவான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்வியாளர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், ஊக்குவிப்பாளர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், டி.ஆர்.ஓ., பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, ”மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற திட்டம்”  நிர்வாக இயக்குநர் லதா சுந்தரம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012, அக்டோபர்

இதுவரை பயனடைந்தவர்கள் : 67,650 மாணவர்கள்

முடிவுகள் : பல குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதால் மகிழ்ச்சி உருவாகிறது. பள்ளிகளில் இனிமையான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகளில் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6,500 குழந்தைகளின் சுயமதிப்பீட்டை அளவிடும் சிறுபுத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களின் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளது. 



இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 11,500 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 200-க்கும் பயிற்சியாளர்கள், பெண்களின் அதிகாரம் குறித்து நிகழ்ச்சி இன்று (27.09.2017) நடந்தது. இதில், குழந்தைகளின் மனநிலை, மாணவர்களின் சுயமதிப்பு, பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய, பின்பற்றக் கூடாத நடவடிக்கைகள் உள்பட 20 விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  பின்னர், இந்த நிகழ்ச்சியில் சுய மதிப்பீட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...