ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் நாள் உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை மாணவர்கள், சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ மாணவிகள் சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரி வளாகத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் மற்றும் ஆட்சியர் அலுவலகம் வழியே பேரணியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் சுற்றுலாத்துறை தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா நிறைவு பெறுகிறது.
