தமிழக ஆளும் அரசு மதவிரோதப் போக்கு மாறவேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

மத்திய மதவாத பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசினைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீப காலமாக தமிழக அரசு மத்திய பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக, மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மௌனம் காத்தது, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் அநீதிக்கு சாமரம் வீசியது என்று பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதை மீண்டும் உறுதிபடுத்தும் செயலாகும். முஸ்லிம்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் யோகா பயிற்சியில் ஓம் என்ற வார்த்தையை உச்சரிப்பதும், சூரியனை வணங்குவது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அனுஷ்ட்டானங்களை அனைவரும் பயிலும் பள்ளிகளில் கலப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

யோகாவில் சூரியனை வழிபடுவதும் ஒரு பயிற்சியாக உள்ளது. முஸ்லிம்கள் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ள யோகா என்ற பெயரில் சூரிய வழிபாட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இந்த இந்திய திருநாட்டில் அவரவர் தான் விரும்பும் சித்தாந்தத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக்கு எதிராக அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தரைமட்டமாக்கும் தேச விரோத செயல் ஆகும்.

எனவே, இந்த அறிவிப்பை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...