வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டத்திற்கான சலுகைகள் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல்துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2017-2018 நிதியாண்டில் 8 குதிரை திறன் முதல் 70 குதிரைத் திறன் சக்தி கொண்ட டிராக்டர்கள் மற்றும் பவர்டில்லர், நெல் நடவு இயந்திரம், நெல் நடவு இயந்திரம், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் வாங்கிக் கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோஅ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மானியத்திற்கு தகுதியாக்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விபரம், விலைப்பட்டியல், மானிய விவரங்கள் வேளாண்மைப் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

மானிய உதவியுடன் கருவிகளை வாங்க விரும்பும் விவசாயிகள் நில உரிமை ஆவணங்கள், சிறு அல்லது குறு விவசாயி சான்று, ஆதார் போன்ற அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பித்து, மூதுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

இத்திட்டத்திற்கு கோவை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக ரூ.101.41 லட்சம் மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், சிறு,குறு விவசாயிகளை கருத்தில் கொண்டு, வேளாண் இயந்திரங்களை வாடகையில் வழங்க ஏதுவாக கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஏதுவாக 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டில் கோவை மாவட்டத்திற்கு ரூ.50 லட்சம் மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல, மானாவாரி விவசாயம் செய்யும் கிராமங்களில், ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்கள் அமைக்க ரூ.8 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், புஞ்சை நில சாகுபடி செய்யும் பகுதிகளுக்கு தனிப்பட்ட இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள முதல் கட்டமாக நடப்பாண்டில் ரூ.19.41 லட்சமும், வாடகை மையங்கள் அமைக்க ரூ.32 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை வழங்கும் திட்டத்தின்கீழ், 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு 90 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 

வேளாண்மை பொறியியல் துறையில் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள இத்திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள கோவை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள், உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தடாகம் சாலை, ஜி.சி.டி. (அஞ்சல்) கோவை -641013 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். 

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்டவர்கள்  உதவிசெயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், மீன்கரை ரோடு, ஒழுங்கு விற்பனைக்கூட வளாகம், பொள்ளாச்சி -1 என்ற முகரியில் விண்ணப்பிக்கலாம். (தொலைபேசி எண் : 0422-2433711, 04259 231271) இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...