ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பேற்ற பின், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொலைதூரம் செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைக்கப்படுகிறது. 700 முக்கிய ரயில்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 500 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
50 எக்ஸ்பிரஸ் ரயில்கள், சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், தொலைதூர ரயில்களில் பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைக்கப்பட உள்ளது. 700-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நேரமும் குறைக்கப்பட உள்ளது. இதேபோல, எஞ்சின் மாற்ற எடுத்துக் கொள்ளும் காலம் அரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாகக் குறைக்கப்படுகிறது. 23 ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.
சிக்னல்களை சரிபார்த்தல், ரயில்தண்டவாளங்களைப் புதுப்பித்தல், மூன்றாவது வழித்தடத்தை அமைத்தல், பயணிகள் பாதுகாப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 12 மாதங்களுக்குள் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை ஒழிக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.